தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை தேசிய மாவீரர் நினைவுசுமந்த( கரம் ) இன்று 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை செவ்ரோன் நகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஒன்பது விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர். ஈகச்சுடரினை 17.09.2000 ஆம் ஆண்டு சாவகச்சேரி பகுதில் நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை. சந்திரா அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க மலர்வணக்கத்தை மாவீரர்களின் சகோதரரும் செவரோன் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளருமாகிய திரு. அலெக்ஸ் அவர்கள் செய்து வைக்க அகவணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றைய போட்டிகள் சம்பந்தமான விதிமுறைகள், செயற்பாடுகள் பற்றி போட்டிகளின் முகாமையாளர் திரு. ராஜலிங்கம் தெரிவித்திருந்தார்.











