ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாக்தாத்தில் அமையப் பெற்றுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியினுள் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
தற்கொலை அங்கியை அணிந்த குண்டுதாரி கட்டிடத் தொகுதியினுள் நுழைந்து தற்கொலை அங்கியை அங்கு விட்டுச் சென்றுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்றதன் பின்னரான காட்சிகள் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் புறக்கணிக்கப்பட்ட பிறமதத்தினர் ஒன்றுகூடும் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கிழக்கு நகரான முஹ்தாதியாவில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
மற்றுமொரு தாக்குதல் தென் கிழக்கு நகரான பாக்தாத்தில் நடத்தப்பட்டுள்ளது.