கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தின் பல வருட காலமாக புனரமைப்புப் பணிகள் இடையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாலத்தின் ஊடாக முல்லத்தீவு பரந்தன் பயணிக்கும் அதிகளவான பயணிகள் இரவு நேரத்தில் பெரும் அசௌகரியங்களை மேற்கொள்வதாகவும் பலர் வீதி விபத்துக்களில் காயமடைந்துவரும் நிலையில், பரந்தன் பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உந்துருளி குறித்த பாலத்தின் உட்பகுதியில் விழுந்ததன் காரணமாக இளைஞர்கள் இருவரும் மரணித்துள்ளனர்.
மரணித்தவர்கள் இருவரும் திருகோணமவைஜெய்க்கா வீட்டுத்திட்டம் இக்பால் நகர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த அண்டன் சாந்தன் 23 வயதுடையவரும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சசிகரன் சிம்புரதன் இக்பால் நகர் நிலா ஒளி திருகோணமலை பகுதியை சேர்ந்த இருவரின் சடலங்களே மீட்கப்பட்டது .
இன்றைய தினம் இவர்களது சடலத்தினை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்மால்ஜெமின் அவர்கள் முன்னிலையில்அப்பகுதியில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் சடலங்ள் Recommendations பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. அத்துடன் அவர்கள் பயணித்த உந்துருளியும் இறந்தவர்களிடமிருந்து 71 ஆயிரத்து நூறு ரூபாய் பணமும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதவான் முன்னிலையில் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.