மட்டக்களப்பு மக்கள் வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் பட்டாசு கொளுத்தும் போராட்டம் என்பவற்றில் ஈடுபட்டனர். இன்று மதியம் 12.00மணிக்கு வங்கிக்கு முன்னால் ஆரம்பமான இப்பேராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்திருந்தனர்.
அநியாயச் செலவுகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் அடிமைத்தனமான நிபந்தனைகளுடனான சுற்றறிக்கைகளை வாபஸ்பெறுமாறும் கோரியுமே இப்போராட்ம் நடாத்தப்பட்டதாக ஆர்பாட்டக்காரார்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோகங்களையும் ஏந்தியிருந்ததுடன் அதிகளவிலான பட்டாசுகளையும் வெடிக்கச்செய்தனர்.