முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதில்லை என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பகுதிகளில் அதிகளவான பகுதி முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றது.64 கிலோ மீற்றர் பகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றப்பட உள்ளது. அதில் 73 வீதமான பகுதி முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகிறது.
எதிர்வரும் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹலோட்ரஸ் என்ன தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,2020ஆம் ஆண்டளவில் நிலக்கண்ணி வெடிகள் முற்று முழுதாக அகற்றப்பட வேண்டுமென விரும்புவதாகவும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதன் மூலம் மக்களை மீள்குடியேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.