தமிழீழ தேசத்தின் சிறந்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் ஐயா அவர்கள் சாவடைந்துள்ளார்.
தேசத்திற்காக பல படைப்புக்களை தந்த மிகச்சிறந்த படைப்பாளி போராட்ட சிந்தனைகளையும் அதன் தேவைப்பாட்டையும் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் இராணுவத்தின் கொடூரங்களையும் தனது படைப்புக்களூடாக வழங்கி எமது மக்களை விழிப்படையச்செய்தவர் புலிகளின் குரல் தமிழீழ வானொலி, தமி ழ தேசிய தொலைக்காட்சி, வெள்ளி நாதம், ஈழ நாதம் என அத்தனை தேசிய ஊடகங்களிலும் அவரது உயீரூட்டமான படைப்புக்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்து இன்று வரலாற்று பெட்டகமாகியுள்ளன. “உயிர்த்தெழுகை” தொடர் நாடகம் ஒன்றே போதும் அவரது திறமைக்கு. நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீள ஒலிபரப்பப்பட்ட அந்த நாடகம் “வன்னி மண்ணின் துயரில் தோய்ந்து மீளெழுகையில் இணைந்து வலம்வரும் ஜீவ வடிவம்” என்ற ஆரம்பத்திற்காகவே வானொலி அருகில் காத்துக்கிடந்த நாட்கள் பல. சாதாரண தரப்பரீட்சைக்காக பாடசாலையில் தங்கி நின்று படிக்கும் போது சித்தப்பா வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த வோக்மனை புத்தகப்பையில் கொண்டுவந்து இரவு அந்த நாடகத்தை மட்டும் கேட்டிருக்கிறேன் மீள ஒலிபரப்பப்படும் போதும் ஒருநாள்கூட அந்த நேரத்திற்காய் தவறியதில் அத்தனை உயிர்ப்பூட்டிய படை. ப்பு அது
பொன்னா, காசி, சரவணைக்கிழவன் என வரிசையில் நீளும் எண்ணற்ற பாத்திரங்களை இன்றும் மறக்கமுடியாது காதால் கேட்ட ஒரு படைப்பை நேரடியாக பார்ப்பதைப்போன்ற சுவை, உயிரூட்டம் படைப்பாளி நா.யோகேந்திர நாதன் ஐயாவாலே இயலுமானது எனலாம். இப்படி ஒரு அற்புதப்படைப்பாளியை இட்டு நிரப்ப முடியாத நல்ல இலக்கிய ஆளுமையை தமிழ்த்தேசம் இழந்திருக்கிறது என்பது பெரும் கவலையைத்தருகின்றது. உங்கள் தமிழ்த்தேச படைப்புக்கள் தமிழிருக்கும் வரை வாழும் உங்கள் நினைவுகளின் தடங்கள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் போய் வாருங்கள் ஐயா! ஆத்ம வணக்கங்கள்.
எஸ்.தவபாலன்