மெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் வெராக்ருஸ் மாநிலத்தில் உள்ள அடோயக் நகராட்சியில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து அடோயக் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
இந்த பயங்கர விபத்தில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர்.
குழந்தைகள் உட்பட உள்ளூர் போட்டிக்குச் செல்லும் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை அந்த பேருந்து ஏற்றிச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் படி ஓட்டுனரின் அதிவேகத்தால் காட்டுப்பாட்டை இழந்தே பேருந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.