ஆழிப் பேரலை கோரத்தாண்டவத்தின் இருபதாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கடந்த (26/12/2024) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஏற்பாட்டில் ஆழிப்பேரலையின் 20ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு சோதியா கலைக்கல்லூரி மண்டபத்தில் 26.12.2024 மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
பிரதான பொதுச் சுடரை சமூக செயற்பாட்டாளர் திரு. கிருஷ்ணபிள்ளை ஏற்றிவைக்க, சுனாமியால் சாவடைந்த மக்களுக்கான பிரதான நினைவுச் சுடரை சமூக செயற்பாட்டாளர் திரு. உதயன் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும் போரினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் சாவடைந்த மக்களையும் ஆழிப்பேரலையின் ஊளித்தாண்டவத்தில் உயிரிழந்தவர்களையும் நினைவு கூர்ந்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
வருகைதந்த தேசிய செயற்பாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள், தமிழ்ச்சோலை தலைமை பணிமனை இணைப்பாளர், தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள், உடகத்துறை சாந்தோர், கலைஞர்கள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மலர் தூவி தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.
நினைவுரையினை த.பு.க பிரான்ஸ் பணிப்பாளர். உறவுச்சோலை இணைபாளர் திரு. வினோத், தேசிய செயற்பாட்டாளர் திரு. நாயகன், ஊடகவியலாளர் திரு. சுதன்ராஜ் ஆகியோர் வழங்கினர். கலைஞர் திரு. சுதர்சன் நினைவு கவி வழங்க, இந்நிகழ்வினை திரு. அருள்மொழி த்தேவன் தொகுத்து வழங்கினார்.
நன்றி
த. பு. க. பிரான்ஸ்