வவுனியா – கோவில்குளம்
பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற
விபத்தில் இளைஞர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் இரவு குறித்த
இளைஞர் மற்றொரு இளைஞருடன்
உந்துருளியில்
சென்றுள்ளார்.
கோவில்குளம் பகுதியில் சென்ற
உந்துருளி கட்டுப்பாட்டை
இழந்து வீதியின் கரையில் இருந்த
மின்சாரக் கம்பத்துடன் மோதி
விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் உந்துருளியை
ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த
காயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு
மரணமடைந்தார், மற்றையவர்
காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ். அராலிப் பகுதியைச்
சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22
வயதான இளைஞரே
உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக வவுனியா
காவல்துறையினர் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.