வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனிற்கு தமிழரசு கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா விடுத்த மிரட்டலையடுத்து அவர் மயங்கிவிழுந்த பரிதாப சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு மைத்திரிக்கு பகிரங்கமாக ஆதரவளித்து அரசியல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விமர்சித்துவரும் அனந்தி சசிதரன் தான் தேர்தலை பகிஸ்கரிக்கப்போவதாகவும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழரசு கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தாறுமாறாக அவரை ஏசியதாகவும் பெண்ணென்று கூட பாராது திட்டித்தீர்த்ததாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் தனது தரப்பு நியாயத்தை தொடர்ந்தும் எடுத்து முன்வைத்த அனந்தி ஒரு சந்தர்ப்பத்தில் நெஞ்சினை பிடித்தவாறு மயங்கிவீழ்ந்துள்ளார். தற்போது பாடசாலை விடுமுறை நாள் என்பதால் அவரது மூன்று சிறுபெண்குழந்தைகளும் வீட்டில் நின்றிருந்த நிலையினில் அவர்கள் வீரிட்டு கத்தியழுதுள்ளனர்.
சம்பவத்தையடுத்து அயலவர்கள் திரண்டு வந்து அவரிற்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
ஏதிர்வரும் தேர்தலில் எவ்வாறு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த நிராகரிக்கப்படவேண்டியரோ அதே போன்று இனப்படுகொலையாளிகளான சந்திரிகா, சரத்பொன்சேகா மற்றும் ரணிலினது கூட்டிணைவான பொது எதிரணியும் நிராகரிக்கப்படவேண்டுமெனவும் அனந்தி வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.