பிராங்கோ லியோன் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச் சோலைப் பள்ளியின் நத்தார் ஒளி விழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
பிறக்கவிருக்கும் பாலக இயேசுவின் வருகைக்கான நான்கவது வாரத்தின் ஆயத்த நாட்களில் (22/12/2024) பிராங்கோ லியோன் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீகத்தின் சார்பில் பங்கேற்ற அருட்தந்தை கிங்ஸிலி அடிகளாரின் தமிழ் திருப்பலியுடன் மாலை 15h00 மணிக்கு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து ஒளிவிழா நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
தமிழ் திருப்பலியின் ஒழுங்குகளையும்,பக்தி நிறைந்த செபவழிபாடுகள், பாடல்கள், மக்கள் மனம் நிறைந்த அருமையான கருத்துக்கள் அழகான தமிழில் அருட் தந்தை கிங்ஸிலியின் சொற்பொழிவுகள் மக்களின் உள்ளங்களில் மகிழ்வினையும்,நற்சிந்தனைகளையும் உருவாக்கியதில் மிகையாகது.
மிகவும் நேர்தியாக ஒழுங்கமைத்த ஏற்பாட்டாளர்களின் முயற்சி பராட்டத்தக்கது.
தமிழ்ச்சோலை சிறார்களின் ஆடல்கள், பாடல்கள், பாலக இயேசுவின் பிறப்பின் மகத்துவம் பற்றிய நாடகம், ந த்தார் தாத்தாவின் ஆடல், பாடல் நிறைந்த குதுகலமான வரவேற்புடன் பள்ளி சிறார்களுக்கு பரிசில்களையும், மக்களுக்கு இனிப்பு பண்டங்களையும் வழங்கி மக்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவைத்த நத்தார் தாத்தாவின் நடிப்பும், ஏனையோரின் நடிப்பும் பராட்டத்தக்கது. மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் பாலக இயேசுவின் அன்பின் விசுவாசமாக ஒன்று கூடி தங்கள் பிள்ளைகளின் நிகழ்வுகளை இரசித்து ஆக்கமும், ஊக்கமும் வழங்கி அமைதியாக பங்கேற்றார்கள்.அருட் தந்தையாரின் ஆசிச் செய்திகளும், தமிழ்ச்சங்க நிர்வாகியின் நன்றி செய்திகளுடனும் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
ஈற்றில் அரங்கத்திலும், நத்தார் தாத்தவுடனும் குடும்பம், குடும்பங்களாக புகைப்படங்கள் எடுத்து மிகவும் மனமகிழ்வுடன் மக்கள் கொண்டு வந்த சிற்றுண்டிகளையும்,
உண்டு சிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வுகள் யாவற்றையும் மிகவும் சிறப்பாக ஆசிரியை கலா அகிலன் தொகுத்து வழங்கியிருந்தார். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் சிறப்பாக நடைபெற மக்களின் பேராதரவு பிராங்கோ லியோன் தமிழ்ச்சங்கத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒளி வீச்சுடன் 2024 ஆம் ஆண்டின் ஒளி விழா நிகழ்வு மக்களின் பாராட்டுக்களுடன் நிறைவுபெற்றது.