பொண்டி பிராங்கோ தமிழ்சங்கம் தமிழ்ச்சோலை மாணவர்களுடனும் பெற்றோருடனும் நேற்று 21.12.2024 சனிக்கிழமை பாலன் ஏசு பிறப்பு நத்தார் ஒளிவிழா சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் பொண்டி மாநகர முதல்வர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
ஏசு பாடல் ஆடல்களுடன் தமிழ் உணர்வுப்பாடல், கவிதைகள், நாடகம் என்பன இடம்பெற்றிருந்தன.
பிராங்கோ தமிழ்ச்சங்கம் தமிழ்ச்சோலை மண்டபத்தில் இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த மகிழ்வுடன் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.