தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் ஐரோப்பிய ரீதியில் 15 ஆவது ஆண்டுகளாக நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2024 எதிர்வரும் (22.12.2024) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு செந்தனிப் பகுதியில் இடம்பெறவுள்ளது.
இன்று பிரான்சு தேசத்தில் பல பாடகர்கள் சிறந்து மிளிருவதற்கும், மக்கள் முன் தெரிவதற்கும் பெரும் அடித்தளமாக இருந்தது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு – தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் என்றால் அது மிகையாகாது.
கடந்த 15 ஆண்டுகளாக நடாத்தப்படும் சங்கொலி விருதுக்கான தாயக விடுதலைப் பாடற் போட்டி பல பாடகர்களை உருவாக்கித் தந்திருக்கின்றது.
மக்கள் மத்தியில் பாடகர்களாக இனம் காட்டியுள்ளது. இன்னும் இலைமறைகாயாக பல குழந்தைகள் முதல் இளையவர்கள் வரை இருந்து வருகின்றனர். இவ்வாறானவர்களை பெற்றோர்கள், குடும்ப உறவுகள், நண்பர்கள், எம்தேச மக்கள் இனங்கண்டு இப்போட்டிகளில் பங்கு பற்றவைத்து எமது கலையுலகிற்கு பெருமைசேர்க்கவேண்டும் – கலைஞர்களைப் பெற்றுத் தரவேண்டும். எழுசுரங்களின் பாடல் நிகழ்வில் எமது தேசக்குழந்தைகளின் திறனை வியந்து பார்க்கும் நாம் எம் கண்முன்னே நிற்கும் கலைக்குழந்தைகளின் திறனைக்கண்டு, கரகோசித்து, கைகளைத்தட்டிக் கரிகாலன் பிள்ளைகள் நாங்கள் என்று உலகிற்கு பறைசாற்றுவோம் வாருங்கள்.
- கலைபண்பாட்டுக் கழகம் – பிரான்சு.