பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகளின் உள்ளரங்க போட்டிகளாக கரம், சதுரங்கம் ஆகிய போட்டிகள் கடந்த 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
பிரான்சு செந்தனிப் பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சின் இணைப்பாளர் திரு.நிர்மலன் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 12.03.2003 ஆம் ஆண்டு மடுப்பகுதியில் வீரச்சாவடைந்த மேஜர் வன்னியனின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அதன் துணைப்பொறுப்பாளர் திரு.சுரேஸ் அவர்கள் ஆரம்பமாகும் போட்டிகள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. இதில் ஆர்வத்துடன் போட்டியாளர்கள் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு.
IF
IF
IF