வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “தாம் பட்டப் படிப்பை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றபோதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், புதிய அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தனர்.