தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றிக் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வலியுறுத்தி 18 ஆவது மாதத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.