இரண்டு மாடி குடியிருப்பில் நான்கு தமிழ் இளைஞர்கள் வசித்து வந்துள்ளனர். இரண்டாம் மாடியில் குறித்த இளைஞர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு இருந்ததாக கூறப்படுகின்றது .
குடியிருப்பின் கீழ் பகுதியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டு மேல் மாடிக்கு பரவியுள்ளது. குறித்த தீ விபத்தில் இருந்து நான்கு இளைஞர்களும் எரிகாயங்களின்றி தப்பியுள்ளனர்.
ஆனால், மரணமடைந்த இளைஞருக்கு
மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடலில் நஞ்சு பரவியுள்ளமையினாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது .
சம்பவத்தில் ஸ்ரீ முருகன் லோசன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த இளைஞர் பெல்ஜியத்துக்கு வந்து சில மாதங்களே என்று கூறப்படுகின்றது.