தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி இன்று மாலை முதல் நாளை வரை போராட்டம்!

0
36

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரியும், தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும் தையிட்டியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை. முதல் நாளை சனிக்கிழமை மாலை வரை போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

அதன் முழு விவரம் வருமாறு:-

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரியும், தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும் தையிட்டிக்கு அழைக்கின்றோம்.

தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராகவும், தனியாருடைய காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 13/12/24 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியிலிருந்து –14/12/24 மறுநாள் மாலை 6.00 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது .அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுக்கொள்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here