வடமாகாணத்தில் பரவுவது எலிக்காய்ச்சல் என்பது பரிசோதனையில் உறுதி!

0
17

வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா இதனைத் தெரிவித்தார்.

உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாள் காய்சல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.

எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here