திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
‘நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுகிறோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரண சான்றிதழையோ அல்ல, முறையான நீதி விசாரணையே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
‘வேண்டாம் வேண்டாம் OMP வேண்டாம், மனித உரிமைகள் இல்லாத நேரத்தில் மனித உரிமைகள் தினம் எதற்கு, சர்வதேச நீதி வேண்டும், வெள்ளைவானில் கடத்திய எங்கள் பிள்ளைகள் எங்கே, வேலைக்கு சென்ற பாடசாலை சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே?’ போன்ற கோசங்களையும் இதன்போது எழுப்பினர்.