“நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியை” – மட்டக்களப்பில் உறவுகள்!

0
104

இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ நாம் கேட்கவில்லை. எமது உறவுகள் எங்கே? அவர்களுக்கான நீதி எங்கே? என்று தான் கேட்கின்றோம்”- இவ்வாறு பல கோஷங்களை எழுப்பியவாறும் வாசகங்களை தங்கியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினரால் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத், ஞா. சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

“நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியை”, “எமது உரிமை ?, எமது எதிர்காலம் ? இப்போது, எமது உறவுகள் எங்கே?, ஓ. எம். பி. ஒரு கண்துடைப்பு நாடகம் என பல வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here