
ஈழப்போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களால் மறக்கமுடியாத ஒட்டுக்குழுக்களில் EPDP முக்கியமான இடத்தை பெறுகிறது.
KS ராஜா முதல் P.தேவகுமாரன் வரையான அத்தனை தமிழ் ஊடகவியலாளர்களையும் சுட்டுக் கொன்ற பங்கு EPDP யைச் சார்ந்தது.
இத்தகவலை எவரும் மறுத்துரைக்க முடியாது. 1994 செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதி இலங்கை வானொலியின் சிம்மக்குரலோன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கே.எஸ் ராஜா அவர்கள் கொல்லப்பட்டு Galle face திடலில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
கொழும்பு பத்திரிகை புகழ் நடராசா அற்புதராசா(அற்புதன்) 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் திகதி EPDP யினரால் கொல்லப்பட்டார்.
வட மாகாணத்தின் BBC யின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி கொல்லப்பட்டார், அதேபோல் சுடர்ஒளி பத்திரிகையின் வட மாகாண நிருபர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் 24.01.2006 அன்று கொல்லப்பட்டார்.
கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் உதயன் பத்திரிகையின் விளம்பர முகாமையாளர் சுரேஸ்குமார் மற்றும் ஊழியரான ரஞ்சித்குமார் ஆகியோர் 2006ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி கொல்லப்பட்டனர்.
அத்தோடு செல்வராஜா ரஜிவர்மன் என்ற உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளரும் 29.04.2007 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் யாழ் மாவட்ட TULF பாராளுமன்ற உறுப்பினர் S.சிவமகராஜா என்பவரும் 20/08/2006 அன்றும் கோப்பாய் கிறித்தவக் கல்லூரி அதிபர் நடராஜா சிவகடாச்சம் 11/10/2007 அன்றும் UNP யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் T.மகேஸ்வரன் 01/01/2008 அன்றும் EPDP யினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வட மாகாண சக்தி TV யின் ஊடகவியலாளர் P.தேவகுமாரன் என்பவரும் 28/05/2008 அன்று கொல்லப்பட்டார்.
இவை அனைத்தும் EPDP என்ற ஒட்டுக்குழுவால் ஈவிரக்கமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள். 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை வடக்கில் EPDP யின் அடக்குமுறை தலைவிரித்தாடிய காலத்தில் எத்தனையோ இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு பிள்ளையான்தான் பரஸ்பரம் காரணம் என்றால் வடக்கே இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் கொலைகள் அனைத்திற்கும் டக்லஸ் தேவானந்தாதான் காரணம் என்பது இலங்கையில் இருக்கக்கூடிய நடுநிலை ஊடகங்களுக்குத் தெரியவில்லையா?
இப்படுகொலைகளுக்கான நீதியான விசாரணைகள் இடம்பெறுவதற்கு ஏன் இந்த நடுநிலை ஊடகங்கள் இன்றுவரை சிறிய அழுத்தத்தைக்கூட சிறிலங்கா அரசுக்கு பிரயோகிக்காமல் இருக்கின்றன?
நன்றி: சிவதாசன் சந்திரமோகன்.