மத்திய கிழக்கில் பதற்றம் – சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை!

0
292

சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது.

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் இராணுவத்துடன் மீண்டும் சண்டையைத் தொடங்கியுள்ளனர்.

ஆசாதின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரச் சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள், வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.இந்த நிலையில் தாம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்க்குள் நுழைந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை டமாஸ்கஸின் மோவாதமியா அல்-ஷாம் மற்றும் தரயா உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் மிஜ்ஜே இராணுவ விமான நிலையத்திலிருந்தும் கூட அரசுப் படைகள் திரும்பப்பெறப்பட்டு விட்டன எனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here