மன்னார் ஆயரை வட மாகாண முதல்வர் சந்தித்தார்!

0
294

IMG_0588வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை நேற்று ஆயரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து முதல்வரிடம் வினவியபோது,  ஆயரின் நலம் குறித்து விசாரிக்கவே தாம்அவரைச் சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆயர் மிக விரைவில் குணமடைவார் எனவும் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன்வருவார் எனவும் இதற்கு இறைவன் அருள்புரிவார் என்கின்ற நம்பிக்கை தனக்கு உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அண்மையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இல்லம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here