யாழ் கச்சேரியடியில் நீர் அள்ளச் சென்றவர் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு!

0
212
well 444ddஇரவு கடமை முடிந்து வந்து நீர் அள்ளச் சென்றவர் கிணற்றில் தவறி வீழ்ந்து  உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் கச்சேரி ஒழுங்கையில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊழியரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான சோமசுந்தரம் தேவராஜா (53 வயது) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் இரவு கடமை முடிந்து வந்து கிணற்றில் நீர் அள்ள முற்பட்ட வேளையில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக இவர் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக இன்று மதியம் இடம்பெற்ற மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here