
பிரான்சு தேசத்தில் பாரிசின் புறநகரில் ஒன்றான Bobigny நகரில் தமிழீழ தாயகத்தில் 1948 முதல் 2009 வரை இன அழிப்புக்குள்ளான மக்களின் நினைவாக நினைவுக்கல் இன்று 07.12.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு திரை நீக்கம் செய்யப்பட்டு வைக்கப்பட்டது.

தமிழ்மக்கள் அதிகமாக வாழும் 93 மாவட்டம் Bobigny மாநகரத்தில் மாநகரசபைக்குரிய நிலத்தில் Parvis de L’ Hotel de Ville de Bobigny இடத்தில் மாநகரசபை முதல்வர் Monsieur Abdel Sadi, துணை முதல்வர் Monsieur Ranjit SINGH மற்றும் சென் சென்டெனி மாநகர சபை, லாக்கூர்நோவ் மாநகரசபையின் ஆலோசகர் உறுப்பினர் சுகுனா, பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கம், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து இதனை ஏற்பாடுசெய்திருந்தனர்.
கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப் பட்டனர்.

நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், பிரெஞ்சு மக்கள் மற்றும் பல்லின மக்கள் கலந்துகொண்டதோடு உரைகளையும் ஆற்றியிருந்தனர்.


















