வங்காள விரிகுடாவில் நாளை காற்றுச் சுழற்சி: எதிர்வரும் நாட்களில் கடும் மழை!

0
90

வங்காள விரிகுடாவில் நாளை புதிய காற்று சுழற்சி உருவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் மீண்டும் ஒரு குழப்பநிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது புயலா, காற்றழுத்த தாழ்வு மண்டலமா என்பதைக் கூற முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 9, 10, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மறைமுக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் 9 ஆம் திகதிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here