முகநூலில் தமிழீழத் தேசியத் தலைவரின் புகைப்படத்தை பதிவிட்ட குற்றச்சாட்டில் யாழ். இணுவிலில் கடந்த 29 ஆம் திகதி சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கஜந்தரூபன் என்ற இளைஞர் இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தேசியத்தலைவரது படத்தை பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் இனவாதப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கஜந்தரூபனினை விடுவிக்க அவருக்காக உழைத்த சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ்,
கனிஸ்ட சட்டத்தரணிகள் மகிந்தன், சட்டத்தரணி நீதன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேலும் பல இளைஞர்களிடம் இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் ஆங்காங்கே கைதுகளும் இடம்பெற்று வருகின்றன.