ஏழு ஆண்டுகள் கடந்தும் ஓர் உண்மை கூட கண்டறியப்படவில்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்!

0
24

ஏழு வருடங்கள் கடந்தும் ஓர் உண்மை கூட கண்டறியப்படவில்லை. எனவே, செயல்திறனற்ற ஓ. எம். பி. உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 15 வருடங்களாக எமது உறவுகளைத் தேடி வருவதுடன் 20. 02. 2017 இலிருந்து தொடர் கவனவீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றோம். தொடர்ந்து வந்த அரச தலைமைகளால் காலத்துக்குக் காலம் ஏமாற்றப்பட்டு வந்ததால் சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்னும் போராடி வருகின்றோம் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய (ஓ. எம். பி.) அலுவலகத்துக்கு புதிய நியமன கோரிக்கை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஓ. எம். பி. சட்டம் வரையப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களுக்கோ அல்லது அவர்களின் வேண்டுகோள்களுக்கோ செவிசாய்க்காது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வாதிகாரத்துடன் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்தார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியோ அவர்களின் பங்குபற்றலுடனோ அப்பொறிமுறையைச் செயல்படுத்த முனைப்புக்காட்டப்படுவதில்லை. மாறாக நாங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கும் வெளிப்படைத்தன்மையற்ற நிலையுமே காணப்படுகிறது.

எந்தப் பொறிமுறையும் சம்பந்தப்பட்டவர்களின் பங்களிப்போ, விருப்போ இல்லாவிட்டால் வெற்றியளிக்காது என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள எவரும் தயாரில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here