
அந்த உபகுழுவின் பணி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் சம நேரத்தில் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் துறைசார் வல்லுநர்கள் அடங்கிய உபகுழுவை அமைக் கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இக்குழுவில் கலை, கலாசாரத்துடன் சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்களை இணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுக்கின்றது.
ஒரு இனத்தின் எதிர்கால வளமும் வாழ்வியலும் தனித்து அரசி யல் உரிமைகளால் மட்டும் தீர் மானிக்கப்பட்டு விடுவதில்லை. மாறாக அந்த இனத்தின் மரபுரிமைகளும் கலை, கலாசாரப் பண்பாட்டு அடையாளங்களும் கட்டிக்காக்கப் படுவதிலும் தங்கியுள்ளதென்ற உண்மையை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது.
இன்றைய சமகால சூழ்நிலையில் எங்கள் இளம் சமூகத்தை வழிப் படுத்துவதில் ஓர் ஆரோக்கியமான சூழமைவு இருப்பதாகத் தெரிய வில்லை.
எச்சந்தர்ப்பத்திலும் எங்கள் இளைஞர்கள் தடம் மாறிப் பயணிக் கக்கூடிய மிகமோசமான சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டி எங்கள் இளம் சமூகத்தினை ஆற்றுப்படுத்துவதன் தேவைக்காக, எங்கள் பண்பாட்டு அடித்தளங்களைக்கட்டியெழுப்புவதும் காப் பாற்றுவதும் நடைமுறைக்குச சாத்தியமாக்குவதும் காலத்தின் கட்டாய தேவையாகும்.
இவ்வகையில் வடக்கு – கிழக்கு மாகா ணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலை, கலாசாரத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவை யுள்ளது.
கலைத்துவப் படைப்புகளும் அதற்கான சந்தர்ப்பங்களும் எங்கள் இளம் சமூகத்தை நிச்சயம் வழிப்படுத்தும் என்பதனைக் கரு த்திற்கொண்டு தமிழ் மக்கள் பேரவை முன் னெடுக்கும் கலை, கலாசாரப் பணிக்கு தமிழ் மக்களாகிய உங்களிடமிருந்து தகுந்த ஆலோசனைகளையும் ஆதரவினையும் வேண்டி நிற்கின்றோம்.
இதற்காக நீங்கள் 0756993212 அல்லது 0710145723 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது kalaachchaaram@ tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ எம்முடன் தொடர்புகொள்ள முடியும்.
எங்கள் மாணவர்களை – இளைஞர்களை நல்வழிப்படுத்துவதன் மூலம் தமிழினம் கல்வி, பொருளாதாரம், சமூக உறவு என்ற பல்பரிமாணங்களில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க முடியும். இந்நம்பிக்கையை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றுசேர் ந்து கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும ; தமிழ் மக்கள் பேரவையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
எங்கள் கலாசாரத்தின், பண்பாட்டின் கட் டுமானங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்படுமாயின் எங்கள் இளம் சமூகத்தினை நல்வழிப்படுத்துவதென்பது மிக எளிமையான விடயம் என்ற அசையாத நம்பிக்கையோடு உங்கள் அனைவரதும் ஆதரவினைத் தமிழ் மக்கள் பேரவை இவ்விடத்தில் வேண்டிநி ற்கின்றது.