தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கம் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவித்துள்ள தேசிய சங்க சம்மேளனம், இந்த ஆர்ப்பாட்டங்கள் பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் உதயகம் மன்பில கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிரசன்ன மாகியுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் முன்னாள் ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷவின் படங்களை ஏந்தியவாறு காணப் பட்டனர்.