சீனாவின் ஷங்காய் நகரில் உள்ள புகழ்பெற்ற பண்ட் ஆற்றங்கரையில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.
பண்ட் நதிக்கரையில் வழமையாக நடைபெறும் 3டி லேசர் காட்சிக்கு சீன அரசு கடந்த ஆண்டு தடை விதித்துவிட்டது.
இருப்பினும், அந்தப் பகுதியில் இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்க அதிகளவிலான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பலர் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
உலகின் மோசமான நெரிசல் பலி சம்பவங்கள்:
1998 ஏப்., 9: சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 118 பேர் பலி.
2001 மே 9: கானாவில் விளையாட்டு மைதானத்தில் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 126 பேர் பலி.
2004 பிப்., 1: சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் பலி.
2005 ஜன.,25 – மகாராஷ்டிரா, மந்த்ரா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் பலி.
ஆக., 31: ஈராக்கின் பாக்தாத் நகரில் விழாவின் போது வெடிகுண்டு பீதியால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1000 பேர் பலி.
2008 செப்., 30. ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சாமுண்டா தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 220 பேர் பலி.
ஆக., 3: இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நந்தாதேவி மலைக்கோவிலில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 140 பேர் பலி.
2010 நவ., 22: கம்போடியாவில் நடந்த தண்ணீர் திருவிழாவில் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 375 பேர் பலி. இது அந்நாட்டின் மோசமான விபத்து.
2011 ஜன., 14: சபரிமலை கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் பலி.
2013 அக்., 13: மத்திய பிரதேசத்தில் ரத்னகார்க் கோயில் விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலி.
2015 ஜன., 1: சீனாவின் ஷாங்காய் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி.