கிறித்தல் தமிழ்ச்சோலையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70ஆவது அகவை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று 01.12.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 16h.00 மணிக்கு அகவணக்கத்துடன்
ஆரம்பமாகியது.
தொடர்ந்து
கிறித்தல் பிராங்கோ தமிழ்ச் சங்கத் தலைவரின் உரை இடம்பெற்றது
நடனம், பேச்சு,கவிதை பாட்டு என பல்சுவை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. சிறப்பாக இளையோரின் கவியரங்கு நடைபெற்றது. தலைவர், தமிழ், தாயகம் என்பவற்றை உள்ளடக்கியதாக அவர்கள் ஆற்றியிருந்தது எல்லோரையும்
கவர்ந்தது.
பொதுவாக எல்லா நிகழ்வுகளும் தாயகச் சிந்தனைகளுடன் தலைவரின் சிறப்புப்பண்புகளை உள்ளடக்கியதாக இருந்ததைக் காணமுடிந்தது. மேலும் பிரான்சில் பிறந்து வளரும் சிறுவர்களின் மொழிவளத்தையும், அதனூடாக அவர்களின் தேசப்பற்றையும் பார்க்க முடிந்தது.
இந்நிகழ்வுகளுடன் சிறப்பாக பிறந்த நாளுக்கான கட்டிகை (கேக்) சிறுவர்கள் சூழ்ந்திருக்க வெட்டிக் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடனவகுப்பு மாணவர்கள் தேசியத் தலைவரின் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்கள்.
இறுதியாக நன்றியுரையுடன் இரவு 19.30 மணியளவில் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற முழக்கத்துடன் இந் நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.