
இரண்டாம் வட்டாரம் நெடுந்தீவைச் சேர்ந்த சிவநேசன் கிருஷா (வயது-22) என்ற யுவதியே மரணமடைந்தவராவார்.
குறித்த யுவதி நெடுந்தீவிலிருந்து தனது தந்தையை பார்ப்பதற்காக நயினாதீவுக்குச் சென்றுள்ளார். திடீரென அங்கு அவருக்கு ஏற்பட்ட வலிப்புக் காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த யுவதியின் சடலம் நயினாதீவு வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.