பிரான்சில் கடற்புலி மாவீரர்களுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் கடந்த 27 நவம்பர் 2024 அன்று செவ்றோன் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது கடலிலே வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்குமான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பிரெஞ்சு தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டன.
தொடர்ந்து மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
செவ்றோன் நகர முதல்வர் உட்பட பெருமளவானோர் பங்குபற்றி மாவீரர்களுக்கான வணக்கத்தை செலுத்தினார்கள்.