சிறிலங்காவிற்கு திரும்பிச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்றுஎச்சரிக்கை!

0
466

air portதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் சிறிலங்காவிற்கு திரும்பிச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்றுஎச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.நா செயலாளர் நாயகம் பேங் கீ மூனின் மூவர் அடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய தென்னாபிரிக்க மனித உரிமைச் சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச நீதிக்கும், உண்மைக்குமான திட்டம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடையும் நிலையிலும் அரச படையினரால் மேற்கொள்ளப்படும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் இன்னமும் தொடர்வதாக அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டவர்கள் சிறிலங்காவிற்கு திரும்பிச் சென்றால் அவர்கள் இவ்வாறான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்று அந்த அமைப்பின் ஆய்வாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹெரிசன் அளித்த பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here