தமிழீழத்தில் அண்ணன்.. அவர்களுடன் முதல் சந்திப்பு..!
நான் சென்ற இயக்க வாகனம் அலுவலக முதன்மை வாயிலில் நின்றது. சீருடை அணிந்த போராளிகள் முதன்மை வாயிற்கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். சுமார் நூற்றைம்பது அடி தூரத்தில் இருந்த அலுவல வாயிலில் நின்ற போராளிகள், என் கையில் வைத்திருந்த Bag யை மிக மரியாதையுடன் வாங்கிக் கொண்டு நீங்கள் செல்லுங்கள் அண்ணே என்றார்கள். உள்ளே இடது புறத்தில் மற்றொரு அறையின் வாயிலில் காவலுக்கு நின்ற இரண்டு போராளிகள் வாயிற் கதவைத் திறந்தார்கள்.
உள்ளே ஒளிவீசும் சூரியனைப் போன்று பிரகாசிக்கும் முகத்தோடு கோடிக்கணக்கான தமிழர் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் த. தே. த. அண்ணன் அவர்கள் நின்று கொண்டு இருகரம் கூப்பி வரவேற்றார்.. என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை…
(த…வர் பி… : பன்முக ஆளுமை நூலில்)
வரலாற்றில் பதிந்த நினைவுகள் அண்ணா..
அண்ணன் 70
= ஓவியர் புகழேந்தி.