வலிகாமம் வடக்கில் 5,500 ஏக்கர் நிலம் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது !

0
188

valikamam-northவலி­காமம் வடக்கில் 5500 ஏக்கர் நிலம் இன்­னமும் உயர்­பா­து­காப்பு வலயப் பகு­தி­யாக உள்­ளது. மேலும் வலி­காமம் கிழக்குப் பகுதி முழு­மை­யாக விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை எடுத்­ததைத் தொடர்ந்து வளலாய் ஜே/284 கிராம அலு­வலர் பிரிவில் 233 ஏக்கர் காணியும், 2015 ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி ஜே/252 பலாலி தெற்கில் 120 ஏக்கர், ஜே/244 வயா­விளான் கிழக்கு 77 ஏக்­கரும், மூன்றாம் கட்­ட­மாக ஏப்ரல் 10 ஆம் திகதி ஜே/235 காங்­கே­சன்­துறை தெற்கு 109 ஏக்­கரும், ஜே/236 பளை வீமன்­காமம் வடக்கு 55 ஏக்கர், ஜே/237 பளை வீமன்­காமம் தெற்கு 99.8 ஏக்கர், ஜே/238 கட்­டுவன் 9 ஏக்கர் , ஜே/240 தென் மயிலை 26 ஏக்கர், ஜே/241 வறுத்­த­லை­விளான் 119 ஏக்கர், ஜே/250 தையிட்டி தெற்கு 17 ஏக்கர், ஜே/252 பலாலி தெற்கு 26 ஏக்கர், வளலாய் 1679 ஏக்கர் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­துடன்,

கடந்த வாரம் காங்­கே­சன்­துறை தெற்கு 26.73 ஏக்கர், மையிட்டி வடக்கு 8.3 ஏக்கர், பளை வீமன்­காமம் வடக்கு 6 ஏக்கர், வறுத்­த­லை­விளான் 8 ஏக்கர், பலாலி தெற்கு 39.67 ஏக்கர், பலாலி வடக்கு 64.73 ஏக்கர், பலாலி கிழக்கு 159.49 ஏக்கர், தையிட்டி தெற்கு 180 ஏக்கர், வளலாய் 210 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.

வலி­காமம் கிழக்கு முழு­மை­யாக விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்ள வேளை வலி­காமம் வடக்கில் சுமார் 5 ஆயி­ரத்து 600 ஏக்கர் விடு­விக்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­படு­கின்­றது.

விடு­விக்­கப்­பட்ட இடங்­களில் சுமார் 26 வரு­டங்­க­ளுக்கு மேலாக மக்கள் இல்லாத இடமாக உள்­ள­மை­யினால் கிண­றுகள், பொதுக்கட்டடங்கள் மற்றும் ஒருசில மின்சார தூண்களை வைத்தே அடையாளம் காணவேண்டியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here