நல்லாட்சி எனக் கூறும் அரசு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் எம்மை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளாதுவிட்டால் மக்கள் புரட்சிவெடிக்கும் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளதுடன், பொங்கல் விழாவை புறக்கணித்து தமது விடுதலைக்காக போராடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 21 தமிழ் அரசியல் கைதிகளின் நேற்றையதினம் விசாரணைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்று இலக்கம் 8 இல் ஆஜர்படுத்தப்பட்டனர். மன்றுக்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில்
நல்லாட்சி அரசு என கூறும் இந்த அரசு எம்மை விடுவிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்றது. தமிழ் அரசியல் கைதிகளை மனித கேடயமாக பயன்படுத்தி தமது செயற்பாடுகளை செய்து வருகின்றனரே தவிர எம்மை விடுவிப்பதற்கான நோக்கம் எவையும் அவர்களிடத்தில் இல்லை.
இந்தநிலையில் தேசிய தைப்பொங்கல் தினத்தைதமிழ் மக்களுடன் கொண்டாடுவதாக கூறியிருப்பது எமக்கு ஆச்சர்யமாக உள்ளது.
எனவே இந்தப் பொங்கல் விழாவில் எம்மில் அக்கறைஉள்ளதமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் மலையகதமிழ் அரசியல் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாது.
எமக்கு சரியான தீர்வை பெற்றுத்தரும் வரையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனமேலும் தெரிவித்தனர்.
-9-