டோனி பிளேயர் நேற்று கூட்டமைப்புடன் பேச்சு!

0
201
8519இலங்கை வந்துள்ள முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் நேற்று திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள தீர்வு காணப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமருக்கு தெளிவூட்டினார்.
இதில் வடக்கிலே காணப்படும் அதிகளவிலான இராணுவப் பிரசன்னம், இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிப் பிரச்சினை, காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எடுத்துரைத்ததுடன் இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் காணப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காத்திரமான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், மக்களின் வாழ்வாதாரங்கள் வலுப்படுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஐ நா. தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் அவர்கள், பொறுப்புகூறுதலானது உண்மை, நீதி, போன்றவற்றை அடிப்படியாக கொண்டு செயற்ப்படுத்தப்பட வேண்டும் என் தெரிவித்தார், அது மாத்திரமன்றி நிலையான, ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய, நியாயமான, செயற்ப்படுத்தபடக்கூடிய ஒரு அரசியல் தீர்வை எட்டுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here