தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது உயிர்களைத் ஈகம் செய்த மாவீரர்களின் நினைவு நாளை முன்னிட்டு தாயக வரலாற்றுத் திறனறிதல் நாளை இணைய வழியில் நடைபெறவுள்ளது.
மாவீரர் நினைவேந்தலை முன்னிட்டு ஐந்தாவது தடவையாக நாளை 23/11/24 மறுநாள் 24 /11/24 ஆகிய நாள்களில் ஐரோப்பிய நேரம் காலை 9.00 மணிமுதல் மாலை 21.00 மணிவரை நடைபெறவுள்ளது.
தாயக வரலாற்றுத் திறனறிதலை உலகத்தில் எவ்விடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் இணைப்பினை அழுத்தி அனைவரும் (அகவை வேறுபாடின்றி) இத்திறனறிதலைச் செய்யலாம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக பரந்துபட்ட கேள்விகளும் பண்பாட்டுப் போராட்டங்கள் சார்ந்த கேள்விகளும் நிகழ்கால உலகச் செய்திகளும் அடங்கியதாக இந்த திறனறிதல் நடைபெறுமென தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், என உலாகளாவிய மட்டத்தில் மூன்று பிரிவாக இந்த திறனறிதல் நடாத்தப்படவுள்ளது.
இணைய வழியில் நடாத்தப்படும் இந்தப் போட்டியின் முடிவில் போட்டியாளரின் மின்னஞ்சலுக்கு உடனடியாகவே சான்றிதழ்கள் கிடைக்கப்படவுள்ளன.
“வரலாற்றைப் படி , வரலாற்றைப் படை” எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய இளையோரிடமும் பொதுமக்களிடமும் எமது இனம் சார்ந்த சரியான வரலாற்றைப் புதியதொரு தொழில்நுட்பத்தோடு கொண்டு,
செல்வதே இந்தத் திறனறிதலின் நோக்கமாகும் என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.