பிரான்சில் பருவகாலத்துக்கான பனிப்பொழிவு ஆரம்பமாகியது. இன்று முதல் (21) இல் து பிரான்ஸ் உட்பட 28 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நவம்பர் 21 ஆம் திகதி வியாழக்கிழமை காலை முதல் பெரும் பனிப்பொழிவு இடம்பெற்று வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் அங்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை இல் து பிரான்ஸ் உட்பட சில பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதேவேளை ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கடும் பனிப்பொழிவு இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகிறது.