இன்று மாவீரர் வாரம் ஆரம்பம்: இந்நாட்களில் மான மறவர்களை நினைவேந்திப் பயணிப்போம்!

0
14

வடக்கு கிழக்கு உட்பட புலம்பெயர் தேசமெங்கும் இன்று நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின்றது.

இந்நாட்களில் மான மறவர்களை நெஞ்சிலே நினைவேந்திப் பயணிப்போம்.

இந்த ஆண்­டும் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் மாவீ­ரர் வாரத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தற்குத் தயா­ரா­கி­விட்­டன.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் , தமி­ழீழ விடு­த­லைக்­கா­கப் போராடி மடிந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் வாரத்தை 1989ஆம் ஆண்­டி­லி­ருந்து கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். ஒவ்­வொரு ஆண்­டும் நவம்­பர் மாதம் 21ஆம் திக­தி­யி­லி­ருந்து 27ஆம் திகதி வரை மாவீ­ரர் வாரம் கடைப்­பி­டிக்­கப்­ப­டும்.

நவம்­பர் 26ஆம் திகதி தமி­ழீழ தேசியத் தலை­வர் மேதகு வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­ன் அவர்களின் பிறந்த நாள் கொண்­டா­டப்­ப­டும். மறு­நாள் நவம்­பர் 27ஆம் திகதி, மாவீ­ரர் நாள் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­ப­டும்.

அன்­றைய தினம் தமிழீழ தேசி­யத் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­ன் அவர்களின் மாவீ­ரர் தின உரை முடி­வ­டை­யும் தரு­ணம், மாலை 6.05 மணிக்கு ஆலய மணி ஒலிக்க விடப்­பட்டு, மாவீ­ரர்­க­ளுக்­கான நினை­வுப்­பா­ட­லு­டன், ஈகச்­சு­ட­ரேற்­றல் நடை­பெ­றும்.

இந்த மாவீரர் வாரத்தில் நாம் கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து மான மறவர்களை நினைவேந்தி நிற்போம் என ஒவ்வொருவரும் மாவீரர்கள் மீது உறுதி எடுத்துக்கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here