ஐந்தாவது ஆண்டாக பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் தாயக வரலாற்றுத் திறனறிதலில் உலகில் அனைத்து நாடுகளில் இருந்தும் ஆர்வமுள்ள தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடியும் என தமிழ்ச் சோலைக் தலைமைப் பணியகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் செய்திக் குறிப்பின் முழு வடிவம் வருமாறு:-
இம்மாதம் 23 மற்றும் 24 ஆகிய நாள்களில் உலகம் முழுதும் உள்ள தமிழ்த் தேசிய வரலாற்று ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இணையவழியில் பங்கு கொள்ள முடியும்.
காலச்சூழல்களே மாந்தர்களின் இயங்குநிலையையும் இருப்பையும் தீர்மானிக்கின்றது. உலகின் அரசியல், பொருண்மிய, வணிக, அறிவியல் தொழில்நுட்பத்தரவுகளும் எமது வாழ்வியலில் உள்ளடங்கியுள்ளன.
உலகளாவிய தமிழர்களின் வரலாறு தொடரவேண்டுமானால் எமது கடந்தகால வரலாற்றினையும் கற்க வேண்டிய தேவையுள்ளது.
இதற்காகவே வரலாற்றுத் திறனறிதல் இணையவழியூடாக நடாத்தப்படுகின்றது.
தாயக வரலாற்றுத் திறனறிதலில் பங்குபற்றுபவர்களின் கவனத்திற்கு
தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் :
- ஒரு தடவை மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.
- குறிக்கப்பட்ட நேரமே வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் திறனறிதலை செய்து முடிக்கவேண்டும்.
- நேரம் கடந்து முடிக்கப்படுபவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெற மாட்டாது.
- தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான முறையில் தமது பெயர்களை குறிப்பிட வேண்டும்.
- தமது பெயர்களைப் பிழையாகக் குறிப்பிட்டிருப்பின் அவ்வாறே சான்றிதழ்களும் கிடைக்கும்.
- ICloud மின்னஞ்சல் முகவரிகள் தவிர்க்கவும்.
- கணினி, வரைபட்டிகை (tablette). திறன்பேசிகளில் (Smartphone) மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.
- தாயக வரலாற்றுத் திறனறிதலை உலகத்தில் எவ்விடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் இணைப்பினை அழுத்தி அனைவரும் (அகவை வேறுபாடின்றி) திறனறிதல் கேள்விகளுக்கான விடைகளை அளிக்க முடியும்.
- இணைய வழி இணைப்பு 23,24/11/2024. – அன்று ஊடகங்களில் 9.00 மணிக்கு வெளியிடப்படும்.
இத்தொலைநோக்கைப் புரிந்து கொண்டு அதில் பங்குபற்றி வரலாற்றறிவூடு எமது விடுதலையை விரைவாக்குவோம்.
தங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு