செல்வம் எம்.பிக்கு திடீர் மாரடைப்பு : வைத்தியசாலையில் அனுமதி!

0
159

selvamதமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

 தற்போது செல்வம் அடைக்கலநாதன் உடல் நிலை தேறி வருவதாகவும், அவருக்கு தொடர்ச்சியாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here