பிரான்சில் எழுச்சியடைந்த தமிழீழத் தேசியத் தலைவரின் “மேதகு எழுபது” நிகழ்வு!

0
16

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை எழுபதை,தமிழீழ மக்களாகிய நாம் வையகம் முழுவதும் பேரெழுச்சியோடு முன்னெடுக்க வேண்டியது வரலாற்றுக் கடமை.
அந்த வகையில் தேசியத் தலைவரின் எழுபதாவது அகவையினை “மேதகு எழுபது” என்னும் கருப்பொருளோடு பிரான்சு மண்ணில் இன்று 17.11.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு Champigny sur Marne பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்- அனைத்துலகத் தொடர்பகம் மற்றும்
தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் பிரான்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு. மயில் ராசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் கலை பண்பாட்டுக் கழக அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.அருண்முகிலன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய உறுப்பினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டது.

வரவேற்புரையினைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

கலை நிகழ்வுகளாக எழுச்சி நடனங்கள், தமிழீழத் தேசியத் தலைவரின் நினைவு சுமந்த கவிதைகள், பாடல்கள், உரைகள் என்பவற்றோடு, ரிரிஎன் தொலைக்காட்சியினால் தமிழீழத் தேசியத் தலைவரின் 70 ஆவது அகவையை ஒட்டிய விவரணக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாக செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.

நிறைவாக பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நன்றியுரைக்கப்பட்டது.

நன்றியுரையினை பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழக துணைப் பொறுப்பாளர் திரு.செல்வா அவர்கள் ஆற்றியிருந்தார்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட நடன ஆசிரியர்கள் , பிரமுகர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர். மதிப்பளித்தலை நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் வழங்கி வைத்தனர்.

தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here