தாயக வரலாற்றுத் திறனறிதல் தொடர்பில் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்!

0
30

எதிர்வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் தாயக வரலாற்றுத் திறனறிதல் தொடர்பாக பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இது பற்றி உரிய மாணவர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களின் தாயக வரலாற்றறிவை மேம்படுத்த ஊக்குவிக்கும்படியும் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாயக வரலாற்றுத் திறனறிதலில் பங்குபற்றும் மாணவர்கள் வரைபட்டிகை (Tablette) அல்லது திறன்பேசி (Smartphone) கொண்டுவருதல் அவசியமாகும். இதுபற்றி, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்படவேண்டும்.

தாயக வரலாற்றுத் திறனறிதலில் பங்குபற்றும் மாணவர்களின் தகவல்களை எமக்கு அறியத்தருதல் அவசியமாகும். இதன்பொருட்டு ஒவ்வொரு வயதுப் பிரிவிற்குமான படிவங்களை தலைமைப் பணியகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் :

  1. இம்முறை இத் திறனறிதல் இரு பிரிவாக நடைபெறும்.

பிரிவு-அ : 15 அகவைக்குட்பட்டோர்
(27-11-2009 இற்குப் பின்னர் பிறந்தோர்)

பிரிவு-ஆ : 15 அகவைக்கு மேற்பட்டோர்
(27-11-2009 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தோர்)

  1. மாணவர்கள் ஓர் ஆசிரியரின் மேற்பார்வையிலேயே திறனறிதலைச் செய்ய வேண்டும்.
  2. ஒரு மாணவர் ஒரு தடவை மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.
  3. குறிக்கப்பட்ட நேரமே வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் திறனறிதலை செய்து முடிக்கவேண்டும்.
  4. நேரம் கடந்து முடிக்கப்படும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெற மாட்டாது.
  5. மாணவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான முறையில் தமது பெயர்களை குறிப்பிட வேண்டும்.
  6. மாணவர்கள் தமது பெயர்களைப் பிழையாகக் குறிப்பிட்டிருப்பின் அவ்வாறே சான்றிதழ்களும் கிடைக்கும்.
  7. iCloud மின்னஞ்சல் முகவரிகள் தவிர்க்கவும்.
  8. கணினி, வரைபட்டிகை (tablette). திறன்பேசிகளில் (Smartphone) மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.
  9. தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான இணைப்பு, பள்ளிகளுக்கு குறித்த நாளில் அனுப்பிவைக்கப்படும்.

தங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

தகவல்
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here