தேசிய விடுதலைப்போராட்டத்திற்கான திசைவழியைக் காட்டி நிற்பது மேதகு அவர்களின் சிந்தனையே
ஓர் ஆண்டு தொடங்கி அந்த ஆண்டு முடியும் வரை நடந்த அனைத்து விடயங்களையும் மீட்டிப்பார்க்கும் தலைவரது எதிர்கால கணிப்புகளை அவர் கூறும் போது எம் மனதில் அதிசயக்குறிதான் தோன்றும். எவராலும் இறந்தகாலம், நிகழ்காலத்தை ஓரளவு கூறிவிடலாம். வரும் காலத்தை உலகளாவிய ரீதியில் கூறுவது மிகக் கடினமே. ஆனால் எமது தேசியத்தலைவர் அவர்கள் தனது தெளிவான பார்வை, சிந்தனையின் வார்த்தைகள் அன்று மட்டுமல்ல இன்று மட்டுமல்ல என்றும் பொருத்தமானதாகவே அமைந்திருக்கின்றது.
அதனை அனைவரும் புரிகின்ற வகையிலே வரிகளாக தந்துள்ளதை தமிழினப்பேறாகவே பார்க்கின்றோம். தமிழில், ஆங்கிலத்தில் வெளிவந்த தலைவரின் இந்தச் சிந்தனையானது பிரெஞ்சு மொழியில் வெளிவருவதும், இன்றைய வரலாற்றின் அரசியல் காலம் எம்மிடம் கொண்டுவந்து விட்டிருக்கின்றது என்றே கூறவேண்டும். எமது தேசியத்தலைவர் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு ஏன் தமிழர்கள் தள்ளப்பட்டார்கள் என்பதன் தெளிவான சிந்தனையின் வெளிப்பாடுகளையும், நியாயமான உரிமைப் போராட்டத்தைப் பற்றி எமது தலைமுறை அறிந்துகொள்ள இது பெரும் பக்கபலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றோம்.