மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஆனார் டொனால்டு டிரம்ப்!

0
198

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதாக பாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி வெற்றிக்கு தேவையான 270 இடங்களை கடந்து கூடுதலாக பெற்று டிரம்ப் முன்னிலை வகிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2016-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த டிரம்ப் 2020-ம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். 2020-ம் ஆண்டு தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய டிரம்ப் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

டிரம்பின் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 267 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் – (51.2 சதவீதம் வாக்குகள்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here