அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு இலங்கை நேரப்படி நேற்று மாலை ஆரம்பமாகி இன்று அதிகாலை நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளன.
இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூம், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிட்டனர்.
இந்தநிலையில் தற்போது வரை குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, ஓக்லஹோமா, மிஸெளரி, டென்னிஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, தெற்கு கரோலினாவில் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வெர்மொன்ட், மசாஸ்சூட், கனெக்டிக்கட் போன்ற மாகாணங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் டொனால்ட் டிரம்ப் 95 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.